|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு,
26.12.2016
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளை எவராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, உலகையே நிலைக்குலையச் செய்த ஆழிப்பேரலையின் ஊளித்தாண்டவம் அரங்கேறிய நாள். அந்த கோரத்தாண்டவ சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சின் ஏற்பாட்டில் 50 Rue de Torcy பாரிஸ் 75018 தேவாலய மண்டபத்தில் 26.12.2016 மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. |
|
|
இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2016
பத்திரிகைச் செய்தி 23.10.2016
யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் கலாவித்தகர் , இசைமாணி தவநாதன் றொபேட், கலாநிதி இராஜராயேஸ்வரி பரிசோ ஆகியோர் நடுவராக கலந்து கொண்ட இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2016 |
|
|
|
|
19வது தமிழர் விளையாட்டு விழா
பத்திரிகைச்செய்தி 3.07.2016
நிழற்படங்கள்
தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 19வது தமிழர் விளையாட்டு விழா 3-07-2016 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. >>>>>
|
|
|
|
|
|
|
|
|
|
|
பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஈழத் தமிழ் மக்களுக்கான நட்புறவுக் குழு ஏற்பாட்டில் பிரான்ஸ் பாராளுமன்ற வளாகத்தில் தமிழ் அமைப்புக்களுடனான சந்திப்பு
09-12-2015 நடைபெற்றது
இன்றைய சந்திப்பு சென் செந் தெனிஸ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் மக்களுக்கான பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவியுமான திருமதி. மரி ஜோர்ஜ் புவே(Marie George Buffet) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தாயகத்தில் கணவனை இழந்த பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், சிறுவர்கள், முன்னாள் போராளிகள், முதியோர்கள் மற்றும் இடம்பெயர்ந்து இன்று வரை வாழும் மக்களின் அவலங்கள் பற்றியும், ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தமிழ் மக்களுக்கான எவ்வித அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை என ஏனைய அமைப்புக்களால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
தாயக மக்களின் அபிலாசைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில், தீர்வினையும், வாழ்வியல் மேம்பாட்டையும் பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து, பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக திருமதி. மரி ஜோர்ஜ் புவே (Marie George Buffet) அவர்கள் தெரிவித்தார்.
மரியாதையின் நிமிர்த்தம் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|