ஆழிப்பேரலையின் 16ம் ஆண்டு சுனாமி நினைவு வணக்க நிகழ்வு,
தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிமனையில் 26-12-2020 அன்று 11.00 மணிக்கு, எமது விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அணர்த்தினாலும் சாவடைந்த மக்களையும், நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது.
பிரதான பொதுச்சுடரினை திரு. பேதுருபிள்ளை ஜெயசூரியர் ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து ஆழிப்பேரலையினால் சாவடைந்த மக்களுக்கான நினைவுச்சுடரும் மலர்வணக்கமும் இடம்பெற்றது.
இன்றய இடர்மிக்கு கொரோனா தாக்கத்தினால், பொது இடத்தில இந்நிகழ்வினை முன்னெடுக்க முடியவில்லை என்பதை அறியத்தருகின்றோம். எமது மக்களுக்கான புனர்வாழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் |