.
 
 

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 17வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா
பத்திரிகைச்செய்தி 13.02.2017

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 17வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 12.02.2017 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு 50 Place de Torcy 75018 பாரிஸ் தேவாலய  மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை திரு. திருமதி  குருபரன் சுபாஜினி தம்பதியினர் ஏற்றி வைத்தனர்.



அரங்கின் மங்கள விளக்குகளை ஈல் சென் டெனிஸ் நகரசபை உறுப்பினர் திரு. ரவிசங்கர், பாரிஸ் பத்திரகாளி அம்மன் தேவஸ்தான சிவாச்சாரி திரு. மகேந்திர சுவாமிகள், நடன ஆசிரியர்களான திரு. அருள்மோகன் முருகையா, திருமதி. அனுசா மணிவண்ணன், திருமதி. இராஜலிங்கம் மஞ்சுளா, திருமதி. மீரா மங்களேஸ்வரன். திருமதி, ரெமிந்தா ஜோர்ச், திருமதி. செலினா மகேஸ்வரன். திருமதி. கலைவாணி செந்தில்குமரன், திருமதி. துசாந்தினி யூலியன் ஜெயசீலன், திருமதி. கற்பகம் சேசா ஆகியோருடன் ஆசிரியர் திரு. கனகசபை அரியரத்தினம் அவர்களும் இணைந்து ஏற்றி வைத்தனர்.

வரவேற்புரையினை பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக பணிப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்களும், வாழ்துரையை திரு. அலன் ஆனந்தன் மற்றும் அனைத்துலக பணிமனை இணைப்பாளர் திரு. நாயகன் அவர்களும் வழங்கினர்.

அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவொலியுடன் பிரான்சில் புகழ்பூர்த்த இருபத்திமூன்று நடன ஆசிரியர்களின், இருனூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட நடன மாணவ மாணவிகளின் 36 நடன உருப்படிகள் மேடையேற்றப்பட்டன. அனைத்து நடன மாணவ மாணவிகளும் ஓருவர்க்கு ஒருவர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி குருவிற்கும், தமை ஈன்ற பெற்றோருக்கும் பெருமை சேர்த்தனர்.

நகரமன்ற உறுப்பினர்கள், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள், போராளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடன மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி உச்சாகப்படுத்தினர்.

அருள் சொனோ, அழகன் மண்டப அலங்கார ஒழுங்கமைப்பாளர், யாழ் தீபன் போட்டோ, ,K.S போட்டோ மற்றும் தென்றல் தயாரிப்பு, ஜ.பி.சி வானொலி, அன்பு கபே, போன் 2000 ஆகியோரின் அனுசரணையில் மண்டபம் நிறைந்த மக்களோடு விழா 21:00 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

 

 
 
English