ஓர் ஆறுதல் வார்த்தை சொல்ல முடியுமா?
'பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா' 31-03-2010
ஆடு, மாடு, நாய், பூனை, கோழி என எந்த வளர்ப்புப் பிராணியும் இல்லாத வீடுகளை நீங்கள் ஒரு தடவை எண்ணிப் பாருங்கள். அதுவும் வன்னியில் அப்படி இருக்கிறது என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். மேற்கு வன்னியில் - பூநகரி, முழங்காவில், ஜெயபுரம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம், வலைப்பாடு என்று எந்த இடத்திலும் நீங்கள் ஒரு கோழியைக் காண மாட்டீர்கள். ஒரு ஆடோ, ஒரு மாடோ அங்கே கிடையாது. எங்கேனும் ஒரு நாயை அபூர்வமாக நீங்கள் காணலாம். ஆனால் அந்த நாயும் அங்கே இருக்கும் யாருடையதாகவும் இருக்காது. அநேகமாக அது அங்கே இருக்கும் படையினரின் நாய்தான். >>>>> |