.
 
 

பத்திரிகைச்செய்தி 12.10.2015

விரிவுரையாளர் இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம் கலாவித்தகர், இசைமாணி தவநாதன் றொபேட், பாடகர் வசந் செல்லத்துரை ஆகியோர் நடுவராக கலந்து கொண்ட இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2015
பத்திரிகைச்செய்தி 12.10.2015

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் 8வது ஆண்டாக நடாத்திய கர்நாடக சங்கீதம், திரையிசைப்பாடல், இசைத்திறன் போட்டி நிகழ்சி 10-11 ஐப்பசி 2015 சனி ஞாயிறு தினங்களில் Ecole Jean Jaurès 15 Avenue Jean Bart 93150 Le Blanc Mesnil மண்டபத்தில் புளோமினல் நகரசபையின் ஆதரவுடன் நடைபெற்றது.

சனிக்கிழமை கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டி நிகழ்வின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை புனர்வாழ்வுக்கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு திருமதி ஜெயசூரியர் ஜெயராணி தம்பதியினர் 14.00 மணிக்கு ஏறிவைத்தனர். அதனைத்தொடர்ந்து பொது சுடரினை புனர்வாழ்வுக்கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு.த. விநாயகமூர்த்தி அவர்கள் ஏற்றிவைக்க, தாயக விடுதலைக்காக தமது இனிய உயிர்களை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

ஆரங்கின் மங்கள விளக்குகளை ரான்சி நகரசபை உறுப்பினர் திரு அலன் ஆனந்தன், புளோமினல் நகரசபை உறுப்பினர் செல்வி ஸ்ரிபெனி சுரேந்திரன், சங்கீத ஆசிரியை திருமதி நடராசா ராஜ்ஜெயந்தி, தமிழ்ச்சங்க தலைவரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் உறுப்பினருமான திரு.தங்கத்துரை, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் திரு.த.கோணேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஏறிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

அதிகீழ்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய பிரிவுகளில் நாற்பதுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றினர். முதல் முறையாக எமது தாயகத்தில் இருந்து கர்நாடகசங்கீத இசைத்திறன் போட்டி நிகழ்சிக்கு கலாவித்தகர், இசைமாணி தவநாதன் றொபேட் (முதுநிலை விரிவுரையாளர் இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும் டென்மாக் நாட்டில் இருந்து இசைத்துறை பட்டதாரியும் பாடகரும் திரைப்பட

இசையமைப்பாளருமான வசந் செல்லத்துரை அவர்களும் நடுவர்களாக கடமையாற்றினர்.

கர்நாடகசங்கீத இசைத்திறன் போட்டியாளர்களுக்கான பக்கவாத்திய இசையினை மிருதங்க ஆசிரியர் திரு. பிலிப் அன்ரு அவர்களும், அவருடைய மாணவர்களும் இணைந்து வழங்க இவர்களோடு வயலின் வாத்தியத்தினை ஆசிரியர் கோமளா அவர்களின் மாணவி செல்வி க.ஜெயனா அவர்களும் ஓகன் வாத்தியத்தை திரு. அவர்களும் இணைந்து வழங்கினர். போட்டிகளின் நடுவே கலாவித்தகர், இசைமாணி தவநாதன் றொபேட் இசைவிருந்து வழங்கி அரங்கம் நிறைந்த கரகோசத்துடன் அனைவரையும் மகிழ்வித்தார். அன்றைய போட்டிகள் சிறப்பான இசைவிருந்தாக இரவு 9.00 மணிக்கு நிறைவுற்றது.

திரையிசைப்பாடல் போட்டிக்கான நிகழ்வில் ஞாயிறு மதியம் 13.00 மணிக்கு வரவேற்பு நிறைகுட விளக்குகளை மிருதங்க ஆசிரியர் திரு. திருமதி அன்ரு சுதர்சினி தம்பதியினர் ஏற்றிவைக்க, பொது சுடரினை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர் திரு. செ. சுந்தரவேல் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தாயக விடுதலைக்காக தமது இனிய உயிர்களை அற்பணித்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

ஆரங்கின் மங்கள விளக்குகளை ஆசிரியர் திரு.கனகசபை அரியரட்ணம், கலைஞர் ஈழத்தமிழ் விழி திரு.பரா, திருமதி. சுரேந்திரன் கலைவாணி, சுவர்ணமகால் உரிமையாளர் திரு.பரமானந்தம், கோல்சிற்ரி உரிமையாளர் திருமதி. மதிவாணன் பத்மசிறி, யாழ் எப் எம் திரு.தீபன், திரு.த.கோணேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஏறிவைத்தனர். அதனைத்தொடர்ந்து திரையிசைப்பாடல் போட்டிகள் ஆரம்பமாகின.

திரையிசைப்பாடல் போட்டியாளர்களுக்கான பக்கவாத்திய இசையினை பாரிஸ் சுப்பர்ரீயுணர் இசைக்குழுவினர் வழங்கினர். இசைமாமேதை விசுவநாதன் அவர்களை நினைவுகூர்ந்து பாரிஸ் சுப்பர்ரீயுணர் இசைக்குழுவின் பாடகர் திரு.லோகேஸ், திரு.பரா அவர்களும் பாடி நினைவுகூர்ந்தனர். ஆசியுரையினை ஆசிரியர் திரு.கனகசபை அரியரட்ணம் அவர்களும், சிவன்கோவில் பிரதமகுரு சிவசுதக்குருக்கள் அவர்களும் வழங்கினர்.

கலைஞர்களோ, கல்விமான்களோ, சாதனையாளர்களோ யாராகட்டும்... அவர்களின் சிறப்பை உணர்ந்து, இனம்கண்டு, போற்றி, பட்டமளித்து, சிறப்பித்து, ஊக்குவித்து, வாழ்த்துவதை ஒரு பெரும் சமூகப்பணியாக கருதி, கடந்த எட்டு ஆண்டுகளாக, சமூகத்திற்கா அற்பணிப்போடு பணியாற்றிய ஒருவரை தெரிவுசெய்து மான்பேற்றி மதிப்பழித்து வருகின்றது தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் அந்தவகையில் 2015;ம் ஆண்டுக்கான 'ஈழத்தமிழ் விழி” விருது “இராகசங்கமம்” நிகழ்ச்சியில், திரண்ட மக்கள் வெள்ளத்தின் முன்பாக, திரு. நாகலிங்கம் இந்திரநாதன் அவர்களுக்கு வழங்கி மதிப்பழிக்கப்பட்டது.

புளோமினல் நகரசபையின் துணைமேயர் ( திருமதி. கிறிஸ்தின் கொமேராஸ்) மற்றும் நகரமன்ற உறுப்பினர் இணைந்து நடுவர்களுக்கான மதிப்பழிப்பினை வழங்கிவைத்தனர்;. துணைமேயர் குறிப்பிடுகையில் முதல் முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து எமது மண்ணிற்கு வருகைதந்த உங்களை நட்போடு வரவேற்கின்றோம் என குறிப்பிட்டார். கலாவித்தகர், இசைமாணி தவநாதன் றொபேட் அவர்கள் குறிப்பிடுகையில் உங்கள் அன்பையும் வரவேற்பையும் ஏற்றுக்கொள்கின்றேன். என்னை இங்கு அழைத்த நம்தமிழ் உறவுகளுக்கும், பிரான்ஸ் வர அனுமதிதந்த பிரான்ஸ் அரசுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

இரண்டு நாள் போட்டிகளிலும் பங்குபற்றிய போட்டியாளர்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சான்றிதழ்களையும்; வெற்றிக்கிண்ணங்களையும் அனைத்துலகச்செயல பொறுப்பாளர் திரு. நாயகன் மற்றும் நடுவர்கள் வழங்கி போடியாளர்களை ஊக்குவித்தனர். இரண்டு போடிகளிலும் பங்குபற்றி இராகசங்கமம் 2015ன் சிறப்பு பாடகியாக தெரிவாகிய வெற்றியாளரின் சிறப்பு பரிசினை பத்திரகாளி அம்மன் ஆலய சிவாச்சாரியார் திரு.மகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். இப்பரிசினை பத்திரகாளி அம்மா தேவஸ்தானம் வழங்கியது.

இந்நிகழ்வின் போட்டியாளர்களுக்கான பயிற்சிகளை திரு.பரா, திருமதி நவாஜோதி, திருமதி. ராஜ்ஜெயந்தி வழங்கினர், ஒலி அமைப்பு அருள் சொனோ, வீடியோ படப்பிடிப்பு ஜிரிவி மற்றும் வீடியோ பாலா, நிழற்படப்;பிடிப்பு யாழ் எப் எம் .தீபன், மேடை அலங்காரம் பேபி பலூன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு உறுதுணை வழங்க, நிகழ்சி தொகுப்பினை திரு.அருள்மொழித்தேவன்,

திரு.விநாயகமூர்த்தி, திரு.சுதர்சன் மற்றும் செல்வி ஸ்ரிபெனி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

சங்கீத ஆசிரியர்கள், மாணவர்கள், வர்த்தக பெருமக்கள், தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள், கலாரசிகப்பெருமக்களின் பேராதரவோடு இரவு 10 மணிக்கு இராகசங்கமம் இசைத்திறன் போட்டி 2015 இனிதே நிறைவுபெற்றது.

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

 
 
English